News November 29, 2024
ARR-சாய்ரா இணைய வாய்ப்பு: வழக்கறிஞர் நம்பிக்கை

29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின், AR ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி பிரிவை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். இந்நிலையில், விவாகரத்து குறித்து அவர்களின் வழக்கறிஞர் கூறும்போது, பிரிந்த தம்பதிகளுக்கு இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். மேலும், விவாகரத்து குறித்த அவர்களது கூட்டு அறிக்கை, பிரிவு மற்றும் வலியை தெளிவாக உணர்த்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Similar News
News April 26, 2025
வெளிப்படையான விசாரணைக்கு தயார்: பாக். PM

பஹல்காம் தாக்குதல் குறித்து வெளிப்படையான, நடுநிலையான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அனைத்து வகையிலான தீவிரவாதத்திற்கும் எதிராகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் சிந்து நதிநீரை நிறுத்தினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 26, 2025
பிரபல இயக்குநரும், நடிகருமான நாகேந்திரன் காலமானார்!

பிரபல இயக்குநர் நடிகர் நாகேந்திரன் காலமானார். இவர் சரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். விமல் நடிப்பில் 2015-ல் வெளிவந்த ‘காவல்’ படத்தின் மூலம் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமாகினார். இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். நாகேந்திரனின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP.
News April 26, 2025
ஏவுகணை சோதனை: எச்சரிக்கும் பாகிஸ்தான்?

இந்தியா INS விக்ராந்தை அரேபியக் கடலில் கராச்சியை நோக்கி நிறுத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் மறைமுக எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளது. இன்றும், நாளையும் அந்நாட்டு கடற்படை அரேபிய கடலில் ஏவுகணை சோதனை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அப்போது, விமானங்கள் மற்றும் கப்பல்கள் அப்பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.