News November 29, 2024

தென்காசி அருகே அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

image

ராயகிரியில் ஏற்கனவே இருந்த டாஸ்மாக் கடை அரசியல் கட்சிகள், பொதுமக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும் மது கடையை மூட வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் நேற்று(நவ.,28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக பேரூர் செயலாளர் சேவக பாண்டியன் தலைமையில், சிபிஐ நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News October 2, 2025

தென்காசி: டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகலவை உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 2, 2025

தென்காசி: கடைகள் ஏலம் அறிவிப்பு

image

தென்காசி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ள 77 கடைகளை குத்தகை உரிமம் அனுபவித்துக் கொள்ள ஆணையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஏலம் விடப்பட உள்ளது. அக்டோபர் 24, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏலம் நடைபெறும் நாளில் காலை 11 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும், 11.30 மணிக்கு ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 2, 2025

தென்காசி: ரயில் சேவையில் மாற்றம்

image

அக்டோபர் மாதம் மாற்றுப்பாதையில் இராஜபாளையம் வழி செங்கோட்டை – மயிலாடுதுறை (16848/16847) விரைவுவண்டி இயக்கம். இரயில் தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் காரணமாக செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவுவண்டி (16848) வழி: இராஜபாளையம் வரும் 03,04, 05,06, 07,09, 10,11,12, 13, 14,16,17,18,22,23,24,25,26,27,28,30,31ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தகவல்.

error: Content is protected !!