News November 29, 2024
தனுஷ் வழக்கு.. நயன் தரப்பு சொன்ன விளக்கம்..!

நயன்தாரா எவ்வித காப்புரிமை மீறலிலும் ஈடுபடவில்லை என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் Behind the Scenes அல்ல எனவும், அது நயன் -விக்கி இருவரின் தனிப்பட்ட நினைவுகளின் வீடியோக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷ் தொடர்ந்த வழக்கில், இருவரும் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், நயன் வக்கீல் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
Similar News
News April 26, 2025
ஹாலிவுட் நடிகை மரணம்… காரணம் தெரிந்தது

ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் (63) மறைவுக்கு புற்றுநோயே காரணம் என்று அவரின் மகள் தெரிவித்துள்ளார். த்ரில்லர் படங்களான Friday the 13th Part VII: The New Blood, “House II: The Second Story” உள்ளிட்டவற்றில் நடித்தவர் லார் பார்க் லிங்கன். அண்மையில் அவர் மரணம் அடைந்தார். அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மார்பக புற்றுநோய் பாதிப்பே காரணம் என்று மகள் பைபர் லிங்கன் கூறியுள்ளார்.
News April 26, 2025
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல் மயிலாடுதுறை, கடலூர், அரியலூரிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்கள்.
News April 26, 2025
போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

போப் பிரான்சிஸின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஏப். 21-ம் தேதி மறைந்த அவரது உடலுக்கு இதுவரை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்பட 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போப் பிரான்சிஸின் உடலுக்கு காலை 10 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. இதனையடுத்து, அவருக்கு இறுதி விடை கொடுக்க மத குருக்கள் தயாராகி வருகின்றனர். #RIP