News November 29, 2024
குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#காலை 8:30 மணி கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் இஎஸ்ஐ காப்பீடு திட்டத்தில் தொழிலாளர்களை சேர்க்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம். #காலை 10 மணிக்கு குளப்புரம் பஞ்., கிளார்க் செல்லன் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக நடந்து கொள்வதை கண்டித்து முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி உண்ணாவிரதம்.
Similar News
News November 13, 2025
குமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

தமிழக தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் 2004 – 2021 ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளாக குமரி மாவட்டத்தில் ஆலங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி, ஈத்தாமொழி அரசு தொடக்கப்பள்ளி, கடியப்பட்டணம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நாளை (நவ.14) காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேடயம் வழங்குகிறார்.
News November 13, 2025
கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில்

கோவில் நகரமான கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இது வருகிற டிச-7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி புறப்பட்டு செல்கிறது. 13ம் தேதி வாரணாசியில் இருந்து கன்னியாகுமரிக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இதனை ரயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.
News November 13, 2025
குமரி மாவட்ட கோர்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளதா?

சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பு:- தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுரைப்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மாவட்ட, வட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் டிச.13ம் தேதி அன்று மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை முடிக்க விருப்பமுள்ளோர் நவ.24 ம் தேதிக்குள் நாகர்கோவில் சட்டப் பணிகள் குழுவில் தெரிவிக்கலாம்.


