News November 29, 2024
₹1,000 கோடி பில் போடுவரா ‘மகாராஜா’..?

‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் 40,000 தியேட்டர்களில் இன்று ரிலீசாகியுள்ளது. முன்னதாக, அந்நாட்டில் சிறப்பு திரையிடலின் போது, மக்கள் கண்ணீர் விட்டும், வியந்தும் படத்தை ரசித்த வீடியோக்கள் வெளியாகின. அதே ரிசல்ட் இன்று சீனா முழுவதும் கிடைத்தால், மகாராஜாவின் மொத்த வசூல் ₹1,000 கோடியைத் தாண்டும் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால், தமிழ் சினிமாவில் ₹1,000 கோடி வசூலித்த முதல் படமாக இது இருக்கும்.
Similar News
News September 8, 2025
BIG BREAKING: முடிவை மாற்றிய செங்கோட்டையன்

மன நிம்மதிக்காக ஹரித்துவார் கோயிலுக்கு செல்வதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். டெல்லி செல்வதற்கு முன்பு, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுச்செயலாளர் எடுத்த முடிவு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். நேற்று வரை ஒருங்கிணைப்பு பணியை செய்வோம் என கூறி வந்த செங்கோட்டையன், அந்த முடிவை மாற்றி கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News September 8, 2025
இந்தியா மீது மீண்டும் வரி விதிக்க USA திட்டமா?

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது மேலும் வரிகளை விதித்தால், அவர்கள் அந்நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்கமாட்டார்கள் என USA கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். EU-வுடன் இணைந்து இதை செயல்படுத்தினால், ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்வதோடு, புடினும் வழிக்கு வருவார் என அவர் பேசியுள்ளார். இதனால், இந்தியா மீது மீண்டும் கூடுதல் வரி விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 8, 2025
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்!

பெரும்பாலான வீடுகளில் மதியம் சமைத்த உணவு மீதமிருந்தால், அதனை சூடுபடுத்தி டின்னருக்கு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சில உணவுகள் கெடவில்லை என்றாலும் அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். SHARE.