News November 29, 2024
சிவகங்கையில் கனமழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்து உள்ளதால், புயலாக உருவாவதில் தாமதம் ஆனது.இந்நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 28, 2025
சிவகங்கை விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வருகிற டிச.31 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது என ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார். அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்துப் பயன் பெறலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
News December 28, 2025
சிவகங்கை: இனி Whatsapp மூலம் தீர்வு!

சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
சிவகங்கை: காலிப் பணியிடங்கள் அறிவிப்பு – கலெக்டர்

சிவகங்கை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள குழந்தை உதவி மையத்தின் ஆற்றுப்படுத்துநா் ஒரு பணியிடம், வழக்குப் பணியாளா் ஒரு பணியிடம் ஆகியவை ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 131, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


