News November 29, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

2024ஆம் ஆண்டுக்கான சமூக நீதி தந்தைப் பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் மற்றும் அதனால் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் உயர எடுத்த நடவடிக்கை மற்றும் எய்திய சாதனைகள் குறித்த விவரங்களுடன், விண்ணப்பங்களை பெயர் முகவரியுடன் வரும் டிசம்பர் 20க்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Similar News

News November 13, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

நாமக்கல்: கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி!

image

நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும், வரும் நவ.17ம் தேதி காலை 11 மணிக்கு நாமக்கல் – மோகனூர் சாலை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.

News November 12, 2025

எம்.பி ராஜேஷ்குமார் நாளை கலந்து கொள்ளும் நிகழ்வு!

image

மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஷ் குமார் நாளை (நவ.13) காலை நாமக்கல் மாநகராட்சியில் தோழி விடுதி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு மற்றும் பழையபாளையம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்வு மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.

error: Content is protected !!