News November 29, 2024
குமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் டிஐஜி ஆய்வு

நெல்லை சரக டிஐஜி மூர்த்தி இன்று(நவ.28) கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அவர் திருவட்டார், மார்த்தாண்டம், களியக்காவிளை மற்றும் புதுக்கடை காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையங்களில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அவர் ஆய்வு செய்தார். காவலர்கள் செயல்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். அவருடன் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உடன் இருந்தார்.
Similar News
News August 5, 2025
குமரி: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனத்தில் ( OICL ) 500 அசிஸ்டண்ட் காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கபடுகிறது. டிகிரி முடித்தவர்கள் 02.08.2025 முதல் 17.08.2025 க்குள் <
News August 5, 2025
பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு விருது

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாநில திட்டக்குழு ஆணையத்தால் கடந்த 1ம் தேதி நடத்தப்பட்ட கருத்தரங்கில் பூதப்பாண்டி அரசு மருத்துவனையில் வளமிகு வட்டார வளர்ச்சித்திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு சிறந்த நடைமுறைக்கான விருது (Best Practices Award) வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
News August 5, 2025
கன்னியாகுமரி மக்களே… மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தெரியுமா?

குமரி அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம் தான் இந்த “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM). இதில் சந்தாதாரர் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3,000-யை குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதி செய்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், ஓட்டுநர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்கள் <