News November 28, 2024

4 ஆவது நாளாக பட்டாசு உற்பத்தி பாதிப்பு

image

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நான்கு நாட்களாக சாரல் மழை மற்றும் குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவுவதால் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்ச்சியான சூழலில் பட்டாசு உற்பத்தி பணிகள் மேற்கொள்ள முடியாது என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து பட்டாசு ஆலைகளும் தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Similar News

News August 7, 2025

விவசாயிகள் மானியத்தில் ஊட்டச் சத்து பெறலாம்

image

திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி  ஒன்றியத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் உள்ள விவசாயிகள் சினையுற்ற கறவை பசுக்கள் வைத்திருப்பின் 50% மானியத்தில் ஊட்டச்சத்து பெற்று பயனடையலாம். இதில் அரசின் மானியத்தொகை ரூ.6500 + பயனாளியின் பங்குத் தொகை ரூ.6500  ஆகும். ஆர்வமுள்ளவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரங்கமன்னார்

image

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது  வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு ஆடி மாத ஏகாதசி முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

News August 6, 2025

மானிய விலையில் காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.

error: Content is protected !!