News November 28, 2024
கிருஷ்ணகிரியில் மழை வெளுக்கும்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, வரும் 30ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
கிருஷ்ணகிரி காவல்துறை இரவு நேர ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (21.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
News August 21, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரர்களின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு அருகிலுள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளை அவசர தேவைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
எடப்பாடி பழனிசாமி இரங்கல்.. 10 லட்சம் நிதியுதவி.!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த தீவிர விசுவாசி க.தங்கராஜ், 12.8.2025 அன்று எழுச்சி பயண பிரச்சாரத்திலிருந்து வீடு திரும்பும் போது நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.