News March 22, 2024
சேலம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கீடு

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாமகவுக்கு சேலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்ட பாமக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே சேலத்தில் திமுக, அதிமுக மற்றும் பாமக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 15, 2026
சேலம் அருகே சீறிப்பாய்ந்த காளைகள்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, சேலம் அருகே உள்ள நிலவாரப்பட்டியில் இன்று தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு திருவிழாவைச் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து துள்ளி வரும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்கினர். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
News February 15, 2026
சேலம்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 15, 2026
சேலம் அருகே விபத்து! 10 பேர் காயம்

தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் ஒரு வேனில் கொல்லிமலைக்குச் சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேனானது தம்மம்பட்டி அடுத்துள்ள சேரடி – வேலிக்காடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தின் பிரேக் செயலிழந்து விபத்தில் சிக்கியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


