News November 28, 2024
கரூரில் நாளை மறுநாள் முதல் ‘க்யூ-ஆர்’ கோடு மூலம் மது விற்பனை

கரூர் மாவட்டத்தில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், கரூரில், ‘க்யூ- ஆர்’ கோடு மூலம் மது விற்பனை முறை, நாளை மறுநாள் முதல் தொடங்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ( நவ.,30) டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில், 87 டாஸ்மாக் கடைகளுக்கு, இரண்டு நாட்களாக, ‘க்யூ-ஆர்’ கோடு ஒட்டப்பட்ட மது பாட்டில்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.
Similar News
News November 11, 2025
கரூர்: இனி EB OFFICE செல்ல வேண்டாம்

கரூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 11, 2025
கரூர்: முதியவரிடம் 7 பவுன் தங்கச் செயின் பறிப்பு

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மொபட்டில் சென்ற முதியவர் கருணாநிதி (67) என்பவரிடம் மூன்று மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து, 7 பவுன் தங்கச் செயினை பறித்து தப்பினர். சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 11, 2025
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே விபத்து!

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே வழக்கறிஞர் பச்சையப்பன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் பச்சையப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலமாக குற்றவாளியை தேடி வருகின்றன.


