News November 28, 2024
இந்தியாவின் புதிய சாதனை.. கே-4 ஏவுகணை டெஸ்ட் வெற்றி!

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து K-4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விசாகப்பட்டினம் அருகே கடல் பகுதியில் இந்த சோதனையைக் கடற்படை உறுதி செய்துள்ளது. இது, ஐஎன்எஸ் அரிகாட்(INS Arighaat) நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து 3,500 கி.மீ தூரம் சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து K-4 ஏவுகணை சோதனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
Similar News
News January 3, 2026
வீரச்சுடர் வேலுநாச்சியாருக்கு மரியாதை

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், CM ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் EPS, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வேலுநாச்சியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடரே வேலுநாச்சியார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
News January 3, 2026
பார்வை இல்லாதவர்களுக்கும் இனி பார்வை கிடைக்கும்!

பிறவியிலேயே பார்வை இழந்த, வாய் பேசமுடியாதவர்களுக்கு நியூராலிங்க் நிறுவனர் எலான் மஸ்க் புத்தாண்டு நற்செய்தி தெரிவித்துள்ளார். பார்வை மற்றும் குரலை மீட்டு தருவதற்கான சாதனங்களுக்கு FDA அங்கீகாரம் கிடைத்துள்ளது. மூளையில் சிப் பொருத்தப்பட்டு, பார்வை நரம்புகளின் வேலை செய்யப்படும். அதேபோல், மூளை நினைப்பதை கம்பியூட்டர் பேசும். இதற்கான பரிசோதனை உலகம் முழுவதும் தொடங்கி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
பொங்கல் ஜல்லிக்கட்டு.. தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. *போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊக்க மருந்துகள், எரிச்சலூட்டும் மருந்துகள் கொடுக்கக் கூடாது. *காயமடைந்தவர்களுக்கு முறையாக முதலுதவி அளிக்கப்பட வேண்டும். *போட்டி நடைபெறும் இடத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். SHARE IT.


