News March 22, 2024

பெரம்பலூர்: எம்எல்ஏ உட்பட 4 பேர் மீது வழக்கு

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் முன் அனுமதி எதுவும் பெறாமல் திமுக கட்சிக்கு ஆதரவாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 19ம் தேதி எம்எல்ஏ பிரபாகரன், திமுக கட்சி பேச்சாளர் கோவிந்தன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதையடுத்து, அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ பிரபாகரன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Similar News

News November 4, 2025

பெரம்பலூர்: வெளுத்து வாங்கப்போகும் மழை!

image

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (நவ.05) மற்றும் நவ.06ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!

News November 4, 2025

பெரம்பலூர்: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<> nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News November 4, 2025

பெரம்பலூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு!

image

பெரம்பலூர் அருகே எசனை போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (75). இவர் நேற்று முன்தினம் மாலை 4 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!