News November 28, 2024
பொது அறிவு வினா – விடை

1) தெற்கின் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது? 2) GCC என்பதன் விரிவாக்கம் என்ன? 3)இமயமலை தொடரின் நீளம் என்ன? 4) சமதளப் பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி எது? 5) தங்கத்தின் வேதியியலின் பெயர் என்ன? 6) ‘அபிஞான சாகுந்தலம் ‘ நூலின் ஆசிரியர் யார்? 7) இலங்கையின் தேசிய மலர் எது? 8) சர்வதேச நாணய நிதியம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
Similar News
News December 9, 2025
செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைகிறார்

செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு திமுக வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்த அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து, அவர் மீண்டும் அதிமுகவில் இணைகிறேன் என்று அறிவித்துள்ளார். கோபியில் செங்கோட்டையனுக்கு எதிராக செல்வத்தை அதிமுக களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News December 9, 2025
மூட்டு வலியை விரட்டும் அற்புத மூலிகை எண்ணெய்

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤ஆமணக்கு எண்ணெய் மூட்டு & தசை வலியைப் போக்க சிறந்தது. மேலும், முகப்பரு, தோல் வறட்சி, முடி வளர்ச்சி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. ➤கண்கள் சிவந்திருந்தால், இந்த எண்ணெய்யை 2 துளி கண்களில் விட குணமாகும். ➤ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையை சேர்த்து அரைத்து, எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். SHARE.
News December 9, 2025
நீதிபதிகளை திமுக பயமுறுத்த நினைக்கிறது: அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதன், இந்திய இறையாண்மைக்கு எதிராக தீர்ப்பு வழங்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீதிபதியை பதவிநீக்கம் செய்ய திமுக கூட்டணி MP-க்கள் நாடாளுமன்றத்தில் கையெழுத்து வாங்கி வருகின்றனர். அரசுக்கு ஒரு தீர்ப்பு பிடிக்கவில்லை என்பதற்காக நீதிபதியை பதவிநீக்கம் செய்வோம் என்றால், அது மற்ற நீதிபதிகளை பயமுறுத்துவதாகத்தான் அர்த்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.


