News November 28, 2024

குறைந்த வாடகையில் ‘ட்ரோன்’ கரூர் கலெக்டர் தகவல்

image

வயல்களுக்கு மருந்து தெளிப்பதற்காக, இரு ட்ரோன்கள் குறைந்த வாடகையில் கிடைக்கிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். வடசேரி பஞ்சாயத்தில் மக்கள் சந்திப்பு முகாம் நேற்று நடந்தது. விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள் குறைந்த வாடகையிலும், வயல்களுக்கு மருந்து தெளிப்பதற்காக 2 ட்ரோன்கள் குறைந்த வாடகையில் கிடைக்கிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய மகசூலை அதிகப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News November 11, 2025

கரூர்: முதியவரிடம் 7 பவுன் தங்கச் செயின் பறிப்பு

image

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மொபட்டில் சென்ற முதியவர் கருணாநிதி (67) என்பவரிடம் மூன்று மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து, 7 பவுன் தங்கச் செயினை பறித்து தப்பினர். சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 11, 2025

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே விபத்து!

image

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே வழக்கறிஞர் பச்சையப்பன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் பச்சையப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலமாக குற்றவாளியை தேடி வருகின்றன.

News November 10, 2025

கரூரில் சிறப்பு மருத்துவ முகாம்: 18,000க்கும் மேற்பட்டோர் பயன்!

image

கரூர் மாவட்டத்தில் கடந்த 02.08.2025 ஆம் தேதி முதல் 01.11.2025 ஆம் தேதி வரை நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் ஆண்கள் 6,911 பேர், பெண்கள் 11,149 பேர் என மொத்தம் 18,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசின் இந்தச் சுகாதாரத் திட்டம் ஏழை எளிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

error: Content is protected !!