News November 28, 2024

111 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி SP

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற 2ஆம் நிலை காவலர்களுக்கான தேர்வில், தூத்துக்குடி மாவட்டத்தில் 150 பேர் தேர்வு பெற்றனர். இதில் 39 பேருக்கு சென்னையில் தமிழக முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார். மீதமுள்ள 111 பேருக்கு நேற்று(நவ.,27) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பணி நியமன ஆணைகளை எஸ்பி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்

Similar News

News September 11, 2025

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் குறைத்தீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து திருப்தி பெறாத புகார் தரர்கள் 69 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானிடம் நேரடியாக மனு கொடுத்து பயன்பட்டனர். அதைத்தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.

News September 10, 2025

தூத்துக்குடி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி!

image

தூத்துக்குடி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025 ஆகும். வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 10, 2025

தூத்துக்குடி: கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி

image

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களை தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவியாளர் ஆனந்த் பிரகாஷிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!