News November 28, 2024
மோர்ப்பண்ணை கிராமத்தில் கனமழைக்கு வீடு இடிந்து சேதம்

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டபொம்மன் என்பவர் மகன் குமார். இவருக்கு சொந்தமான மண் சுவர் ஓட்டு வீடு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இடிந்து சேதமடைந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.
Similar News
News August 23, 2025
ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 23, 2025
நான் முதல்வன் திட்டத்தில் 123 மாணவர்கள் உயர் கல்வி பயன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறை, வேலைவாய்ப்பு துறை சார்பில் நான் முதல்வன்- உயர்வுக்கு படி திட்ட 3 சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. கடந்த 2 சிறப்பு முகாம்கள் மூலம் 110 மாணவ, மாணவியர் உயர் கல்வியில் சேர்ந்து பயன் பெற்றுள்ளனர். நேற்றைய (ஆக.22) முகாமில் 123 மாணவ, மாணவியர் பங்கேற்று 79 மாணவ, மாணவியர் பயன் பெற்றுள்ளனர். என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News August 23, 2025
ராமேஸ்வரம் ரயிலில் போலீஸ் டிக்கெட் பரிசோதகர் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16617) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெயிலின் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டது. அவர் போலியான நபர் எனக்கு தெரிய வந்தபோது அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை.