News November 28, 2024
புயல் கரையை கடக்கும் இடம் இதுதான்..

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ.28ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நவ.30ஆம் தேதி காலையில் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் அன்று மாலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னை – புதுச்சேரி இடையே கரையை கடக்கும். தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதி மரக்காணம் – கல்பாக்கம் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
வெண்கலப் பதக்கம் வென்றார் மனு பாக்கர்

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மனுபாக்கர் 219.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த குயிங்கி மா 243.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கமும், கொரியாவை சேர்ந்த ஜின் யாங் 241.6 புள்ளிகள் பெற்று வெள்ளியும் வென்றனர். அணி பிரிவில் மனுபாக்கர், சுர்சி சிங், பாலக் இணைந்து 1730 புள்ளிகள் பெற்று 3-ம் இடம்பிடித்தனர்.
News August 20, 2025
அர்ஜுன் தாஸுடன் நடிக்கும் ஐஸ்வர்யா லக்ஷமி

மாரி 1, 2 பாகங்கள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது காதல் மற்றும் காமெடி கலந்த வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கட்டா குஸ்தி, பொன்னியன் செல்வன் 1, 2 பாகங்களில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷமி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
News August 20, 2025
உலகின் காமெடியான விலங்குகள்

நமக்குத் தெரியாமல் நம்மை யாராவது போட்டோ எடுத்தால், அதில் நாம் காமெடியாக ஏதாவது செய்திருப்போம். அது போல தான் விலங்குகளும் சில நேரங்களில் காமெடியாக போட்டோக்களில் சிக்கிவிடுகின்றன. இப்படி காமெடி விலங்குகளை போட்டோ எடுப்பவர்களுக்காக போட்டிகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. அப்படியான போட்டியில் பகிரப்பட்ட சில போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம், Swipe செய்து பார்க்கவும்.