News November 27, 2024
திருவாரூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகிற நவம்பர் 30-ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதற்காக வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அன்றைய தினம் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சியினரின் பாடை ஊர்வலம்!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அத்திக்கடை, பாமணி கிராமங்களில் மக்கள் சந்திக்கக் கூடிய அடிப்படை பிரச்சனைகளை அரசுக்கு அடையாளப்படுத்தும் விதமாக பாடை ஊர்வல போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் இன்று (செப்.15) நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு முன்னிலை வகித்தார்.
News September 15, 2025
திருவாரூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News September 15, 2025
திருவாரூர்: கரண்ட் பில் குறித்து சந்தேகமா? இத செய்ங்க!

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை வேண்டாம். <