News November 27, 2024
9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதாவது, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடியில் அந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 3ஆம் எண் புயல் கூண்டு எனில், திடீர் காற்றோடு மழை பொழியும் என அர்த்தமாகும்.
Similar News
News August 22, 2025
சிறுபான்மையினருக்கு நெருக்கடி: CM ஸ்டாலின்

சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக CM ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசு வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் கூட்டம் நெடுநாள் இருக்காது என்றும் அவர் எச்சரித்தார்.
News August 22, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. CM ஸ்டாலின் முடிவு

பொங்கல் பரிசுத் தொகையாக <<17478371>>ரேஷன் கார்டுக்கு ₹5,000<<>> வழங்க CM ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இத்துடன் வழக்கம்போல் வழங்கப்படும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், முழு கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றையும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இதற்கான அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட இருப்பதாகவும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. SHARE IT
News August 22, 2025
Beauty Tips: முகத்துல பருக்கள் இருக்கா? இதோ Simple தீர்வு!

வறண்ட சருமம், சுருக்கங்கள், முகப்பருனால கஷ்டப்படுறீங்களா? இதுக்கான தீர்வு உங்க கிட்சன்லயே இருக்கு. சருமப் பிரச்னைகள்ல இருந்து விடுபட கறிவேப்பில்லை மாஸ்க்கை நீங்க Try பண்ணலாம். இதுக்கு, கறிவேப்பிலைய நன்கு அரைத்து, அத தேன், கற்றாழை ஜெல், அல்லது மஞ்சள் கூட கலந்து முகத்துல போட்டு அத 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்க. இதுல இருக்க ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகத்துல இருக்க பிரச்னைகளை போக்கிடும். SHARE.