News November 27, 2024
மத்திய அமைச்சரை சந்தித்த நாமக்கல் எம்.பி

டெல்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நேரில் சந்தித்தார். அப்போது, துறந்தோ ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தும் கலந்துரையாடினார்.
Similar News
News August 13, 2025
நாமக்கல் முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்த நிலையில், இதற்கிடையே நேற்று(ஆக.12) நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News August 13, 2025
நாமக்கல்: கறிக்கோழி விலை உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று(ஆக.12) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக் கோழி விலை கிலோ ரூ.92 ஆக அதிகரித்து உள்ளது. அதன்படி, முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News August 13, 2025
நாமக்கல்: கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞர்கள் கைது

நாமக்கல்: மல்லசமுத்திரம் கீழ்முகம் பொன்னியாறு அருகே 4 கிலோ கஞ்சாவை விற்க கடத்தி வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அஜய் ராவுத் (35 ), திலீப் குமாா் சேத்தி (28) ஆகிய இருவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். நீதிபதி ரங்கராஜன், பிடிபட்ட இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா்.