News November 27, 2024

தங்கச்சிமடதில் அதிக மழை பதிவு 

image

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நேற்று(நவ.26) இராமேஸ்வரம் தீவில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக நகர்ந்து வருவதையொட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சிமடத்தில் 62.2 மிமீ மழையும் தீர்த்தண்டாதனம் 48.60,இராமேஸ்வரம் 48, பாம்பனில் 46.1, வட்டனம் 45.20, மண்டபம் 44.80, திருவாடானை 37 மிமீ மழை பதிவாகி உள்ளது.

Similar News

News August 20, 2025

ராம்நாடு: மீனவர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்களை ஜூலை.13 அன்று இலங்கை கடற்படை கைது செய்தனர். இந்த வழக்கு 4-வது முறையாக இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் படகு ஓட்டுனர் யார் என்பது விசாரணையில் தெரியவராதால் மீனவர்கள் 7 பேருக்கும் செப்.3 வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.

News August 20, 2025

வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

ராம்நாடு ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாகவும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தலும் அவசியம். மேலும் விவரங்களுக்கு www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகலாம்.

News August 20, 2025

ராம்நாடு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்…

✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!