News November 27, 2024
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 75 கிமீ வேகத்தில் ரயில் இயக்க அனுமதி

பாம்பன் ரயில் பாலத்தில் 75 கிமீ வரை ரயிலை இயக்கலாம் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. பாம்பன் கடலில் 550 கோடி செலவில் இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் கட்டப்பட்டது. கப்பல் வந்து செல்வதற்கு வழி விடும் லிப்ட் வடிவத்தில் இயங்கும் இந்த செங்குத்து பாலம் இந்தியாவின் முதல் பாலமாகும். பயணிகள் ரயிலை 75 கிமீ வரையும் செங்குத்து பாலத்தில் 50கிமீ வரையும் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 23, 2025
நான் முதல்வன் திட்டத்தில் 123 மாணவர்கள் உயர் கல்வி பயன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறை, வேலைவாய்ப்பு துறை சார்பில் நான் முதல்வன்- உயர்வுக்கு படி திட்ட 3 சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. கடந்த 2 சிறப்பு முகாம்கள் மூலம் 110 மாணவ, மாணவியர் உயர் கல்வியில் சேர்ந்து பயன் பெற்றுள்ளனர். நேற்றைய (ஆக.22) முகாமில் 123 மாணவ, மாணவியர் பங்கேற்று 79 மாணவ, மாணவியர் பயன் பெற்றுள்ளனர். என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News August 23, 2025
ராமேஸ்வரம் ரயிலில் போலீஸ் டிக்கெட் பரிசோதகர் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16617) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெயிலின் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டது. அவர் போலியான நபர் எனக்கு தெரிய வந்தபோது அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை.