News November 26, 2024
முன்பதிவு ரயில் டிக்கெட்டில் பயண தேதியை மாற்றும் வசதி

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது நாம் குறிப்பிடும் தேதியை, பிறகு OFFLINEல் மாற்றும் வசதி உள்ளது. இதுபோல் செய்வதற்கு, பயண நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டுடன் அருகிலுள்ள ரயில்நிலையம் சென்று நாம் விரும்பும் தேதியை குறிப்பிட்டு ஏற்கெனவே உள்ள தேதியை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் இந்த வசதி இல்லை. ரத்து செய்யும் வசதியே உள்ளது. ஆனால் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
Similar News
News August 22, 2025
ஆறுமுகனாக காட்சி தரும் விநாயகர்!

தம்பி ஆறுமுகம் போலவே, அண்ணன் விநாயகரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆறு முகங்களுடன் சண்முகா நதிக்கரையில் காட்சி தருகிறார். சூரனை வீழ்த்திவிட்டு, உக்கிரத்துடன் இருந்த முருகனின் கோபத்தை தணிக்க, ஆறுமுகத்துடன் காட்சி தந்து சிரிக்க வைத்தாராம் விநாயகர். இதனால், விநாயகர் ஆறுமுகத்துடன் காட்சி தருகிறார். இங்கு வந்து விநாயகரை வழிபட்டால், சகல பாவங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.
News August 22, 2025
விஜய் உடன் கூட்டணி சேரும் முக்கிய கட்சி?

விஜய் இதுவரை விமர்சிக்காத அதிமுகவை கூட மதுரை மாநாட்டில் விமர்சித்தார். ஆனால், <<17474959>>விஜயகாந்தை பாராட்டி<<>> பேசியதில் அரசியல் கணக்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ‘விஜய் எங்க வீட்டு பையன், எங்களுக்கு தம்பிதான்’ என பிரேமலதாவும் தெரிவித்துள்ளார். இதனால், தவெக – தேமுதிக கூட்டணி உருவாகும் என பேச்சு அடிபடுகிறது. ஜன. 9 தேமுதிக மாநாட்டில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம். இந்த கூட்டணி பற்றி உங்க கருத்தென்ன?
News August 22, 2025
நெல்லைக்கு இன்று வருகிறார் அமித்ஷா

நெல்லை மாவட்டத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெறும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். முன்னதாக கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பிற்பகலில் நெல்லைக்கு வருகிறார். மாலை சுமார் 3.20 மணியளவில் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் நிர்வாகிகளிடம் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.