News March 21, 2024

நீலகிரி தொகுதியில் நான்கு முனை போட்டி.

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ், திமுக சார்பில் சிட்டிங் எம்பி ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் என 4 பேர் அறிவிக்கப்பட்டு நான்கு முனை போட்டி இருந்து வருகிறது. இதனால் நீலகிரி தொகுதி தமிழகத்திலேயே ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.

Similar News

News October 26, 2025

TNAU-வில் 2 நாள் பயிற்சி

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் சாம்பார் பொடி, ரசப்பொடி, தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-6611340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று தெரிவித்துள்ளது.

News October 26, 2025

கோவை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

கோவையில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்<<>>. தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. (SHARE பண்ணுங்க)

News October 26, 2025

கோவை: உங்களுக்கு குழந்தைகள் இருக்கா?

image

கோவையில் வரும் 27-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை (புதன் கிழமையை தவிர்த்து) அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதாரநிலையங்கள் (ம) அங்கன்வாடி மையங்களில் 6-மாதம் முதல் 5வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படவுள்ளது. கோவையில் 2,66,89 குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (குழந்தை வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க)

error: Content is protected !!