News November 26, 2024

RBI கவர்னருக்கு என்ன பாதிப்பு? அப்போலோ விளக்கம்

image

இந்திய ரிசர்வ் வங்கி(RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக சென்னை அப்போலோ ஹாஸ்பிட்டல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நெஞ்செரிச்சல் காரணமாக நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ், சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News August 22, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News August 22, 2025

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் மஞ்சள் பால்

image

சூடான பாலில் மஞ்சள் கலந்து, தேவையான அளவு கருப்பட்டி கலந்து அவ்வப்போது குடித்து வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
➤முதுகெலும்பு, மூட்டுகளை வலுப்படுத்த உதவும்
➤வாத பிரச்சனைகளை சரிசெய்ய உதவும்
➤புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்
➤சருமம் பளபளப்பாகும்
➤நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும்

News August 22, 2025

ஆன்லைன் கேமிங் மசோதா சமூகத்தை காக்கும்: PM மோடி

image

ஆன்லைன் கேமிங் மசோதா-2025, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதாக PM மோடி அறிவித்துள்ளார். இது கேமிங், புத்தாக்கம் மற்றும் படைப்பாக்க மையமாக இந்தியாவை உருவாக்கும் அரசின் உறுதியை காட்டுவதாக தெரிவித்த அவர், இ-ஸ்போர்ட்ஸ், ஆன்லைன் சோஷியல் கேம்ஸ் ஆகியவற்றை ஊக்குவிக்கும் அதே நேரம், பணத்தை வைத்து ஆடும் ஆன்லைன் கேம்களின் கெடு விளைவுகளில் இருந்து சமூகத்தை காக்கவும் உதவும் என்றார்.

error: Content is protected !!