News November 26, 2024
கரூர்: நெற்பயிர் காப்பீடு கடைசி நாள்

கரூர் மாவட்டத்தில் சாம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் நவ.30க்குள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயன் பெறலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம். பதிவு செய்யும்போது விண்ணப்பத்துடன் நடப்பு சாகுபடி அடங்கல், பேங்க் பாஸ்புக் நகல், ஆதார் நகல் ஆகியவற்றை இணைத்து, பிரீமியம் தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே விபத்து!

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே வழக்கறிஞர் பச்சையப்பன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் பச்சையப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலமாக குற்றவாளியை தேடி வருகின்றன.
News November 10, 2025
கரூரில் சிறப்பு மருத்துவ முகாம்: 18,000க்கும் மேற்பட்டோர் பயன்!

கரூர் மாவட்டத்தில் கடந்த 02.08.2025 ஆம் தேதி முதல் 01.11.2025 ஆம் தேதி வரை நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் ஆண்கள் 6,911 பேர், பெண்கள் 11,149 பேர் என மொத்தம் 18,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசின் இந்தச் சுகாதாரத் திட்டம் ஏழை எளிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
News November 10, 2025
கரூர் வேளாண் அறிவியல் மையத்தில் 2025 பயிற்சி

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் இயங்கி வரும் கரூர் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் முதுநிலை விஞ்ஞானி வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, 2025 ஆம் ஆண்டில் மையத்தில் நடைபெறவிருக்கும் பயிற்சிகளின் விவர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விருப்பமுள்ளோர் இந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.


