News March 21, 2024
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர் செல்வம் போட்டி..!

வரும் மக்களவை தேர்தலில் ராமநாதபுர நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவர் பாஜக கூட்டணியில் இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் எங்களின் தொண்டர் பலத்தை நிருபிப்போம் எனவும் சூளுரைத்துள்ளார்.
Similar News
News October 26, 2025
ராமநாதபுரம்: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் www<
News October 26, 2025
ராமநாதபுரத்தில் 10 நாளில் 124 பேர் பாதிப்பு

ராமநாதபுரம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதுஇவ்வாறு தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன் கூறுகையில், ராமநாதபுரத்தில் கடந்த 10 நாட்களில் 124 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News October 25, 2025
ராம்நாடு: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.


