News November 26, 2024
மனு கொடுத்த சிறிது நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் செய்த மனுதாரருக்கு பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் சார்பில் ரூபாய் 6000 மதிப்புள்ள தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Similar News
News October 26, 2025
விருதுநகர்: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் www<
News October 26, 2025
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு GOOD NEWS

சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.7000 கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளது. ஆனாலும் பட்டாசு உற்பத்தி பாதிப்பால் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் வரும் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுக்கான தட்டுப்பாட்டை போக்கும் வகையில், வழக்கமாக தீபாவளி முடிந்து ஒரு மாதம் கழித்து துவங்கும் பட்டாசு உற்பத்தி பணி இந்த ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களிலேயே துவங்க உள்ளது.
News October 25, 2025
சிவகாசியில் நாய்கடியால் 2959 பேர் பாதிப்பு

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் 01.01.2024 முதல் 31.07.2025 வரை நாய்கடியால் 2959 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


