News March 21, 2024
கடலூர் அருகே ரோந்து பணி அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (21/03/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 26, 2025
கடலூர்: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 26, 2025
கடலூர்: பேருந்து மோதி தொழிலாளி பரிதாப பலி

சிதம்பரம், காசிம்கான்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீரசோழன் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பேருந்து மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த பாலமுருகன் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News October 26, 2025
கடலூர்: ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 25) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


