News November 26, 2024
சோலார் பேனல் விலை உயர வாய்ப்பு

சோலார் பேனல் மூலக் கூறுகள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு அளித்த வரிச் சலுகையை சீனா குறைத்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவில் ஏற்றுமதி மானியம் 13%இல் இருந்து 9%ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் சோலார் செல்களின் விலை 40% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 21, 2025
குறைந்த வட்டியில் ₹10 லட்சம் கடன் வேணுமா?

சொந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு கலைஞர் கைவினைத் திட்டத்தில் TAMCO மூலம் தமிழக அரசு ₹10 லட்சம் வரை கடன் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு ₹3 லட்சம் வரை வருமானமுள்ளவர்கள் இந்த கடனை பெறலாம். அவர்களுக்கு 4% வட்டியில் 5 ஆண்டு கால தவணையில் கடன் வழங்கப்படும். இதேபோல், ஆண்டுக்கு ₹8 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு 6% வட்டியில் கடன் கிடைக்கும். மாவட்ட கைத்தொழில் ஆபிஸை அணுகி விண்ணப்பிக்கலாம். SHARE IT.
News August 21, 2025
MLA என்னை ஹோட்டலுக்கு அழைத்தார்: பிரபல நடிகை

கேரளாவில் இளம் MLA ஒருவர் மீது நடிகை ரினி ஆன் ஜார்ஜ் பாலியல் குற்றச்சாட்டு கூறி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சோஷியல் மீடியா மூலம் பழகிய அவர், சில நாள்களிலேயே ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்ததாக நடிகை புகார் கூறியுள்ளார். மேலும், நெருக்கமாக இருக்கலாம் எனக்கூறி 5 ஸ்டார் ஹோட்டலுக்கு வர முடியுமா எனக் கேட்டு அந்த நபர் தொந்தரவு செய்ததாகவும் ரினி ஆன் ஜார்ஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News August 21, 2025
உணவை வீணடித்தால் ₹20 பைன்

உணவை வீணாக்குவதை தவிர்க்கும் வகையில், புனேயில் உள்ள ஒரு உணவகம் விதித்துள்ள கண்டிஷன் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் மெனுவை போட்டோ எடுத்து ஒருவர் பதிவிட, SM-லும் அது வைரலாகியுள்ளது. அந்த விலைப்பட்டியலின் இறுதியில் ‘உணவை வீணாக்கினால் ₹20 கட்டணம் விதிக்கப்படும்’ என எழுதப்பட்டுள்ளது. பலர் இதை பாராட்டினாலும், ‘வீணாக்கும் உணவுக்கும் சேர்த்து தானே காசு கொடுக்கிறோம்’ என்கின்றனர் சிலர். உங்க கருத்து?