News March 21, 2024
நெல்லையில் பொது விடுமுறை அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழா வருகின்ற 25ஆம் தேதி நெல்லையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் வருகின்ற 25 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 21) அறிவித்துள்ளார். மேலும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் நடைபெறும் என்றும், தேர்வு நடைபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 13, 2025
பாஜக மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ இன்று நெல்லைக்கு வருகை தந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு, பாஜகவை சேர்ந்த மகளிர் அணியினர் மலர்தூவி வரவேற்றனர். பாஜக மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாநில அணி பிரிவு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
News April 13, 2025
நெல்லையில் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘9498794987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News April 13, 2025
தேர்தல் எனும் தேர் வடம் பிடிக்க ரெடி- நயினார் நாகேந்திரன்

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று விடுத்துள்ள பதிவு: தேர்தல் வெற்றி என்பது தேர்த் திருவிழா போல, ஊர் கூடி இழுக்க வேண்டிய உற்சாகத் திருவிழா. அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றிக்கான தடம் பதிக்க, வடம் பிடிக்க நான் ரெடி. என் மீது நம்பிக்கை வைத்த மத்திய மாநிலத் தலைவர்களுக்கும், பேராதரவு நல்கி பெருமகிழ்ச்சி வெளிப்படுத்திய கட்சியின் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என் நன்றி அறிதலை தெரிவிக்கிறேன்.