News November 25, 2024

தேசிய அளவிலான போட்டிக்கு செங்கல்பட்டு மாணவி தேர்வு

image

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வரும் செங்கல்பட்டை சேர்ந்த ஆர்.ஸ்ருதிகா என்ற மாணவி மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட  சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான ஒடிசாவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்கவுள்ளதைத் தொடர்ந்து, மாணவிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் சீருடை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இவருக்கு நாமும் பாராட்டு தெரிவிக்கலாமே.

Similar News

News August 8, 2025

செங்கல்பட்டுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 8) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News August 8, 2025

செங்கல்பட்டு மக்களே நம்பர் நோட் பண்ணிக்கோங்க

image

இன்று செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 7, 2025

சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்

image

வருகிற 17-ந்தேதி நாகர்கோவில் – தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06012) மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக 18-ந்தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06011) மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

error: Content is protected !!