News March 21, 2024
மாவட்ட எஸ்பி அலுவலகம் முக்கிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 20 காவல்துறை அதிகாரிகள் மூலம் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மேலான தகவல்களுக்கு 9042822722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News October 26, 2025
திருப்பத்தூர்: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர்!
News October 26, 2025
ஜோலார்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் ஆண் சடலம்!

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே நடைபாதை மேம்பாலத்தில் இன்று (அக்.25) சுமார் 30 வயது தக்க வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News October 26, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.


