News November 25, 2024
பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 629 கோரிக்கை மனுக்கள்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று ( நவ.25 ) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 629 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில் குமரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 25, 2025
வேலூர்: நாளை எங்கெங்கெல்லாம் முகாம்

வேலூர் மாவட்டத்தில் நாளை (ஆக.26) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்; 1.வேலூர் மாநகராட்சி – சாலம்மாள் கல்யாண மண்டபம் சைதாப்பேட்டை. 2.பள்ளிகொண்டா – பேரூராட்சி அலுவலகம் சமுதாயக்கூடம். 3.காட்பாடி- ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் கரிகிரி.
4.அணைக்கட்டு- டி.எம்.டி மஹால் கழனிபாக்கம். 5.குடியாத்தம்- வி.பி மஹால் நெல்லூர்பேட்டை. 6.பேரணாம்பட்டு-சாந்தி ஜீவா திருமண மண்டபம் சின்ன தாமல் செருவு.
News August 25, 2025
பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்

காட்பாடி, குகையநல்லூர் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த பயனாளிக்கு அலுமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளியில் தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உட்பட பலர் உடன் இருந்தனர்.
News August 25, 2025
கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.