News March 21, 2024
புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில், ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. எனவே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்த புகார்களை 9655220100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
ஈரோடு இரவு ரோந்து காவல் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
ஈரோடு மாவட்டத்தில் மின் தடையா? உடனே CALL

ஈரோடு,மாவட்டத்தில் பருவமழை துவங்குவதால், மின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி வேண்டுகோள்விடுத்துள்ளார். மின் கம்பி அறுந்தால் அல்லது மின்தடை, மின் கட்டணத்தில் ஏற்படும் குழப்பங்கள் அல்லது மின் சம்பந்தமாக வேறு ஏதேனும் உதவி தேவைபட்டால் தொடர்புக்கு – 94987 94987 அல்லது வாட்ஸ் ஆப் எண் -94458 51912 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.SHERE பண்ணுங்க
News October 17, 2025
கோபி அருகே விஷம் குடித்து தற்கொலை!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (34). டிரைவராக வேலை பார்த்து வந்த இவருக்குக் குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் பாக்யராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.இந்தநிலையில் பாக்யராஜ், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை!