News November 25, 2024

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பாலின உறுதிமொழி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பாலின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., தலைமையில் இன்று (நவ.25) அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Similar News

News August 14, 2025

காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (14.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

காஞ்சிபுரம் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டோர் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால் பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இனி இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News August 14, 2025

காஞ்சிபுரம்: சொந்த ஊரில் வங்கி வேலை!

image

காஞ்சிபுரம் மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!