News November 25, 2024
Finance Tips: வெள்ளியில் முதலீடு செய்யலாமா?

தங்கத்தைப் போல வெள்ளியை முதலீடாக கருதினால், அதை ETF வடிவில் வாங்கலாமென நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அக்.31 உடன் முடிந்த கடந்த ஓராண்டில், வெள்ளி ETFகள் 32% வருவாய் ஈட்டி கொடுத்துள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியில் வெள்ளி தேவைப்படுவதால், பல நாடுகள் அதை கொள்முதல் செய்கின்றன. இதற்கு GST உள்ளிட்ட செலவுகள் உண்டென்பதால் 10% Portfolio-ஐ வெள்ளிக்கு ஒதுக்கலாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News January 13, 2026
விஜய் படம் ரீரிலீஸிலும் சிக்கல்

சென்சார் பிரச்னையால் ‘ஜன நாயகன்’ படம் தள்ளிப்போனதால் ‘தெறி’ படம் பொங்கல் நாளில் (ஜன.15) ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தியேட்டரை திருவிழாவாக்க ரசிகர்கள் தயாராகி வந்தனர். இந்நிலையில், ரிலீஸாகவுள்ள பட (ஜன நாயகன்) தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெறி பட ரீ-ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
News January 13, 2026
கூட்டணி: முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் டிடிவி

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் அமித்ஷாவை டிடிவி சந்தித்த நிலையில், NDA கூட்டணியில் இணைந்தால் அமமுகவிற்கு 7 சீட்டுகள் ஒதுக்கப்படலாம் என்று பேச்சு எழுந்தது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் உள்ளடி வேலை பார்த்து தங்களது வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படலாம் என TTV நினைக்கிறாராம். இந்த குழப்பத்தால், கடந்த 3 நாள்களாக எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
News January 13, 2026
ஹாஸ்பிடல்களில் அடையாள அட்டை கட்டாயம்

தமிழக அரசு ஹாஸ்பிடல்களில் இன்று முதல் நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு 24 மணி நேரமும் அடையாள அட்டை கட்டாயம் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலில் மகப்பேறு வார்டு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதன் எதிரொலியாக அரசு ஹாஸ்பிடலில் இனி ஐடி கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


