News March 21, 2024
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரங்கள், மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு தனித்தனியாக துணை இராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சிசிடிவி மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News October 18, 2025
கோவை: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
News October 18, 2025
தூய்மை பணியாளர்களுக்கும் லீவு விடுங்க

தீபாவளியை முன்னிட்டு அரசு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்க பட்டுள்ளதுடன், தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாளும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கோவை லேபர் யூனியன் ஏஐடியூசி செயலாளர் என்.செல்வராஜ் தீபாவளிக்கு அடுத்த நாள் தூய்மை பணியாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு ஒன்றை இன்று அளித்துள்ளார்.
News October 18, 2025
கோவையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்?

கோவையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவிலிருந்து பன்றி இறைச்சி மற்றும் தீவனப்பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. 36 கண்காணிப்பு குழுக்கள், 20 அதிவிரைவு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.