News November 25, 2024

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Similar News

News August 15, 2025

தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறையில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இவ்விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News August 15, 2025

மயிலாடுதுறை: சொந்த ஊரில் அரசு வேலை!

image

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ’33’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஆக.29-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 14, 2025

மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு வேண்டுமா?

image

மயிலாடுதுறை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்பத்தாரின் விபரத்தோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW

error: Content is protected !!