News November 25, 2024
குமரி அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை 292 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 169 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 501 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 610 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 422 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Similar News
News August 7, 2025
இடைநிலை துணை தேர்வு சான்றிதழ் பெற அறிவுறுத்தல்

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தியில்;2021 இடைநிலை துணைத்தேர்வு மற்றும் மே.2022 பொதுத்தேர்வு / ஆக.2022 இடைநிலை துணைத் தேர்வு வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித் தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச் சீட்டுடன் நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
News August 7, 2025
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர தேதி நீட்டிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை 19.06.25 முதல் நடைபெற்று வருகிறது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் சேர்க்கை பெற கால அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ-யில் தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அழகுமீனா இன்று (ஆக.7) தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
ஐதராபாத் – கன்னியாகுமரி ரயில் அக்.10ம் தேதி வரை நீடிப்பு

குண்டூர், திருப்பதி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் திருச்சி, மதுரை வழியாக இயங்கும் வண்டி எண்: 07229/30 கன்னியாகுமரி – ஹைதராபாத் வாரந்திர சிறப்பு ரயில் 10.10.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் இன்று (ஆக.7) தெரிவித்துள்ளனர். இது ரயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.