News November 25, 2024
அணைகளில் இருந்து வெளியேறும் நீரின் அளவு

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணைகளான 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர், 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர், 52 அடி முழு கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் இருந்து வினாடிக்கு இரண்டு கன அடி தண்ணீர் வெளியேறுவதாக மாவட்ட நிர்வாகம் இன்று(நவ.25) தெரிவித்துள்ளது.
Similar News
News October 27, 2025
நெல்லை: லைன்மேனை தேடி அலையாதீங்க!

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 27, 2025
நெல்லை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நில உடமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வேளாண்மை அடுக்ககம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தனி குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. பிஎம் கிஷான் திட்டத்தில் பயன் பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் தங்களது அடுத்த அடுத்த தவணைகளை பெற நில உடமை ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வலைதளத்தில் இதுவரை பதிவு செய்யாத 6868 விவசாயிகள் அருகில் உள்ள இ- சேவை மையத்தை அணுகலாம்.
News October 27, 2025
நெல்லையில் இருவர் மீது குண்டர்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் திருட்டு வழக்கில் கைதான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஜாபர் சாதிக் (20), நெல்லை அருகன்குளத்தை சேர்ந்த கந்தசாமி என்ற கார்த்திக் (21) ஆகியோரை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


