News November 25, 2024
நாடாளுமன்ற அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

அதானி விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற அவைகளை முடக்கி வருகின்றனர். காலை 11 மணிக்கு கூடிய மக்களவை அமளி காரணமாக 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
சட்டம் அறிவோம் : போலீசை தண்டிக்கும் சட்டம் தெரியுமா!

ஒரு போலீஸ்காரர் பொதுவெளியில் மரியாதை குறைவாக நடத்தினால், அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியும்? BNS 296 சட்டத்தின் கீழ் பொது இடத்தில் ஒரு அரசு அதிகாரி உங்களிடம் தரக்குறைவாக நடந்துக் கொண்டார் என்றால், புகார் அளிக்கலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 மாத சிறைத்தண்டனை அல்லது ₹1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். SHARE IT.
News August 21, 2025
சிங்கம் பாணியில் வேட்டை அரசியல்: விஜய் குட்டி கதை

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும், அப்படி வந்து இரையை குறிவைத்தால் விடாது என மதுரை மாநாட்டில் 2026 தேர்தலை குறிப்பிட்டு விஜய் பேசினார். சிங்கம் கர்ஜித்தால் 8 கிமீ தூரத்திற்கு அதிரும் என உணர்ச்சி பொங்க பேசிய அவர், 2026 தேர்தலில் மாற்றம் நிகழப் போவதற்கான அடையாளம் இந்த மாநாடு என்றார். மேலும், 1967, 1977 பாணியில் அரசியல் மாற்றத்தை நோக்கி மக்கள் தயாராகி வருவதாகவும் சூளுரைத்தார்.
News August 21, 2025
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பாப்போம்!

நியூஸ் படிச்சி படிச்சி டயர்ட் ஆகிட்டீங்களா.. வாங்க உங்க மூளையை சுறுசுறுப்பாக்குவோம். சட்டென பார்த்தால், கடினமாக தெரியும். ஆனால், ஒரே ஒரு டிரிக் தெரிந்து விட்டால் போதும், இது ரொம்ப ஈசி. ஒரே ஒரு சின்ன Hint தரோம். 11 = 20, 12 = 31 என்ற வரிசையில் இந்த எண்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை கவனித்து பாருங்க. பதில் தெரியும். எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்க என பார்ப்போம்? SHARE IT.