News November 25, 2024
மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட பலி..!

கோவை மாவட்டம் நரசிபுரத்தைச் சேர்ந்த பாரதி கண்ணன் (24) கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இந்த விரக்தியில் இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக, நேற்று தூத்துக்குடியில் ஒரு இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 12, 2026
தோல்வியால் துவண்டு உள்ளீர்களா? இதை படியுங்கள்..

விவேகானந்தரின் பிறந்தநாளில் அவரின் போதனைகளை கேளுங்க *தோல்வியைக் கண்டு ஏமாறாதே. வெற்றி முடிவல்ல, தோல்வி இறுதிப் படி அல்ல *ஒரு யோசனையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு யோசனையை வாழ்க்கை ஆக்குங்கள், அதை நினைத்துப் பாருங்கள், கனவு காணுங்கள், அந்த எண்ணத்தில் வாழுங்கள். உடலின் ஒவ்வொரு பகுதியும் அந்த எண்ணத்தால் நிறைந்திருக்கட்டும், மற்ற யோசனைகளை விட்டுவிடுங்கள். இதுவே வெற்றிக்கான வழி. SHARE IT.
News January 12, 2026
வெளியூரில் இருந்தே பொங்கல் பரிசு ₹3,000 வாங்கலாம்

பொங்கல் பரிசு ₹3,000 மட்டுமல்ல தவிர்க்க முடியாத சூழலில் உங்களுடைய ரேஷன் பொருள்களை கூட நீங்கள் நியமிக்கும் ஒருவர், வாங்க முடியும். அதற்கான வழிமுறைகள் TNPDS-ல் உள்ளன. அதற்கு ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட உங்களது செல்போன் எண், நியமிக்கும் நபரின் ஆதார் அவசியம். <
News January 12, 2026
ஒரே மேட்ச்.. 5 மெகா ரெக்கார்டுகள்!

களமிறங்கும் ஒவ்வொரு மேட்ச்சிலும் ஏதோவொரு சாதனையை விராட் கோலி படைத்து கொண்டே இருக்கிறார். NZ-க்கு எதிரான முதல் ODI-ல் அவர் 93 ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு வருத்தமளித்தாலும், அந்த போட்டியில் மட்டும் அவர் 5 மெகா ரெக்கார்டுகளை படைத்துள்ளார். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும்.


