News March 21, 2024
புதுகை அருகே மீன்பிடித் திருவிழா கோலாகலம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூ திருவிழா மற்றும் அக்னி பால்குட திருவிழாவை முன்னிட்டு கொன்னைப்பட்டி கொன்னை கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தா தூரி கச்சா இவைகளை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
Similar News
News December 31, 2025
புதுகை: குளத்தில் மூழ்கி 1½ வயது குழந்தை பலி!

திருக்கோகர்ணம் அருகே மாறாயப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தையை நேற்று காலை முதல் காணவில்லை என தேடி வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள களரிக் குளத்தில் குழந்தையின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் குழந்தையை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 31, 2025
புதுகை: புத்தாண்டு – காவல்துறை கடும் எச்சரிக்கை!

புதுகை மாவட்டத்தில் இன்று இரவு புத்தாண்டு விழா கொண்டாட்டம் என்ற பெயரில் DJ பார்ட்டி ஏற்பாடு செய்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அதிக ஒளி பட்டாசு வெடித்தல், இருசக்கர வாகனங்களில் ரேஸ் செய்தல் ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலில் குளிக்கவும், படகில் அழைத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என SP அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று டிச.30 இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


