News November 25, 2024
பொது அறிவு வினா – விடை

1) சிரிக்க வைக்கும் வாயு எது? 2) BIS என்பதன் விரிவாக்கம் என்ன? 3) இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி யார்? 4) ராஜ நாகத்தின் அறிவியல் பெயர் என்ன? 5) ‘கடல் புறா’ நூலின் ஆசிரியர் யார்? 6) முதல் கர்நாடகப் போர் எப்போது நடந்தது? 7) நிலவில் காலடி எடுத்து வைத்த 2ஆவது மனிதர் யார்? 8) உலகளவில் அதிக கார் திருட்டு நடக்கும் நாடு எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
Similar News
News December 28, 2025
சேலத்தில் சம்பவ இடத்திலேயே பலி!

சேலம் பள்ளப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (கூலித் தொழிலாளி). இவர் வேலைக்குச் செல்வதற்காக பள்ளப்பட்டி மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, எதிர்பாராதவிதமாக பார்த்திபன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பார்த்திபன் உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீசார், உடலைக் கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 28, 2025
மாரடைப்பு ஆபத்தை தடுக்க இதை சாப்பிடுங்க (PHOTOS)

முன்பெல்லாம் மாரடைப்பு என்றால் வயதானவர்களுக்கு தான் வரும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய பரபரப்பான சூழலில் இளைஞர்களும் இதன் பிடியில் சிக்கி வருகின்றனர். முறையற்ற உணவு முறையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உங்கள் இதயத் துடிப்பை வாழ்நாள் முழுவதும் சீராக வைத்திருக்க உதவும் சில முக்கியமான உணவுகள் எவை என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க. SHARE பண்ணுங்க.
News December 28, 2025
விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக தலைவர்கள் மரியாதை

கருப்பு MGR என அழைக்கப்படும் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று. இந்நிலையில், கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். அது முடிந்த பிறகு பேரணி நடைபெறவுள்ளது.


