News March 21, 2024
வேடசந்தூர்: மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

வடமதுரை இபி காலனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (64)., மனைவி கஸ்தூரிபாய் கொடைக்கானலில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் இன்று காலை துர்நாற்றம் வீசியதால் அருகில் வசிப்பவர் வடமதுரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த ராதாகிருஷ்ண உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 11, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (செப்.10) இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
திண்டுக்கல் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து!

திண்டுக்கல்: கோபால்பட்டி அருகே கணவாய்ப்பட்டி கொரசினம்பட்டி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செப்டம்பர்.10) கார் – பைக் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் வந்த ஒட்டன்சத்திரம் இடையகோட்டையைச் சேர்ந்த ஆஷிஷ் (27) என்பவர் படுகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
News September 10, 2025
திண்டுக்கல்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஏல அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம் ஆகிய தாலுகாக்களில் உள்ள 15 குளங்களின் மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கின்றன. இதுகுறித்த மேலம் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.