News November 25, 2024
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

நாளை நவம்பர் 25 தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மற்றும் தேவையான பொருட்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 14, 2025
தஞ்சாவூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய<
News October 14, 2025
தஞ்சை: 500 மரக்கன்றுகளை நட்டு வைத்த மாணவர்கள்

பெருமகளூர் அரசினர் மேல்நிலை பள்ளியில், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து நேற்று குறுங்காடுகள் அமைக்கப்பட்டது. விழாவில், ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் 500 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை தங்கமணி முன்னிலை வகித்தார்.
News October 14, 2025
தஞ்சை: பிணமாக கரை ஒதுங்கிய வாலிபர் உடல்!

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியரான பாரதி (24) என்பவரின் சடலம் நேற்று திங்கள்கிழமை மாலை மீட்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஆற்றில் மூழ்கிய அவரை போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் படித்துறையில் சடலம் ஒதுங்கிய நிலையில், போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.