News November 25, 2024
புதுச்சேரி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் தெய்வசிகமாணி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வங்கக்கடலில் உருவாக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை (26ம் தேதி) தமிழகம்- புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், புதுச்சேரி பகுதி மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.
Similar News
News September 13, 2025
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று (செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மூலம் தெரிவிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW…
News September 13, 2025
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று(செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News September 12, 2025
டென்னிஸ் விளையாடிய முதக்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி இன்று கோரிமேடு என்.ஆர் டென்னிஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.